Latestமலேசியா

KLலில் மொத்த விற்பனைச் சந்தையில் கத்திக் குத்துச் சம்பவம்: சந்தேக நபரைத் தேடுகிறது காவல் துறை

கோலாலம்பூர், செப்-18- கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையொன்றில் தொழிலாளி ஒருவரைக் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு காவல் துறை வலை வீசியுள்ளது.

அச்சம்பவத்தில் முதுகில் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த தொழிலாளி, செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பியதாக Sentul மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Anuar Bakri Abdul Salam தெரிவித்தார்.

அத்தொழிலாளிக்கு சந்தேக நபர் அறிமுகமானவர் அல்ல. அந்நபரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார். அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையில் வேலை செய்து கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் திடீரென அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்ததாக முன்னதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!