
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட ஐவர் உயிர் தப்பினர்.
மலேசியா – இந்தோனேசியா- தாய்லாந்து- சிங்கப்பூர் கடல் நடவடிக்கை பயிற்சியில் அந்த ஹெலிகாப்டர் ஓட்டுனருடன் ஐவர் பங்கேற்றபோது இச்சம்பவம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இன்று காலை 9.51 மணியளவில் Tanjung Kupang போலீஸ் நிலையத்திலிருந்து AS355N ஹெலிகாப்டர் புறப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியது.
சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்த அதன் ஓட்டுநர் மற்றும் இதர நால்வரை மெரின் போலீஸ் குழு காப்பாற்றி அவர்களை மலேசிய கடல் அமலாக்க நிறுவன படகுத்துறைக்கு கொண்டுவந்தனர்.
அவர்கள் அனைவரும் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போக்குரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்து புலனாய்வுப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.