
கோலாலம்பூர், செப்டம்பர்-16,ம.இ.கா முன்னாள் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு முன்னாள் உறுப்பினருமான டத்தோ வி.எல். காந்தனின் மறைவு நாட்டுக்கும் கட்சிக்கும் பேரிழப்பாகும் என ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்திற்குத் தைப்பூச பொது விடுமுறையைப் பெற்றுத் தந்தது, பத்துமலை குகைக் கல்லுடைப்புப் பிரச்னையைத் தடுத்து நிறுத்தியது மற்றும் சிலம்பக் கலைக்கு அரசாங்க அங்கீகாரம் பெற்றுத் தந்தது என டத்தோ காந்தனின் பங்களிப்புகள் மகத்தானவை என அவர் குறிப்பிட்டார்.
சிறந்த வழக்கறிஞராகவும், சுங்கைவே மக்களுக்கு வீட்டு உரிமையைப் பெற்றுத் தந்த தலைவராகவும் திகழ்ந்த அவரது சேவைகள் என்றும் நினைவுகூரப்படும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
அரசியல், சமூகம், சட்டத் துறை என பன்முக ஆற்றல் கொண்ட டத்தோ காந்தன், தனது 89-ஆவது வயதில் நேற்று காலமானர்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.



