Latest

ஜப்பானில் சுரங்கப் பாதையில் மர்மமான வாசனையை நுகர்ந்ததை தொடர்ந்து 13 பேருக்கு மூச்சுத் திணறல்

தோக்யோ, மே-11-தோக்கியோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சுரங்க ரயிலில் மர்மமான பொருளைச் சுவாசித்ததால், குறைந்தது 13 பேர் மூச்சுத்திணறல் அவதிக்கு உள்ளாகினர்.

நேற்று தோக்யோ அருகே JR ஈஸ்ட் ரயிலில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அவசர அழைப்பு வந்ததை தொடர்ந்து மூன்று குடும்பங்கள் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டன.

யோகோஹாமா மற்றும் கவாசாகி நிலையங்களுக்கு இடையே பயணித்த JR டோக்கைடோ ( Tokaido) வழித்தட சுரங்க ரயிலில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இருமல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன், பயணிகள் திடீரென உடல்நலக்குறைவை உணர்ந்ததால், இந்தச் சம்பவம் பீதியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான கண் எரிச்சலும் ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த பல சாட்சிகள் தெரிவித்தனர்.

மேலும் அவசர உதவி வழங்குவதற்காக 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகள்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களில் ரஷ்யர்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருந்தார்களா என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!