
கோலாலம்பூர், அக்டோபர் 21 – கோலாலம்பூரிலுள்ள ஆசியா ஜெயா (Asia Jaya) இலகு ரயில் நிலையத்தில், Rapid KL பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் தண்ணீர் போத்தல்களைத் தரையில் வைத்து தங்களது வரிசையை அடையாளப்படுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பான படங்களை Threads – இல் சமூக வலைத்தள பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த நடைமுறை மலேசியர்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் பழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பலரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அரசு சுகாதார கிளினிக்குகளில், குறிப்பாக வயதானவர்கள், தங்களது வரிசையை உறுதிப்படுத்த தண்ணீர் போத்தல்கள் அல்லது கிளினிக் அட்டைகளை வைத்து இடம்பிடிப்பதாக மற்றொரு பயனர் தெரிவித்தார்.
அதேபோல், பள்ளி விடுதிகளில் குளிப்பதற்காகக் காத்திருக்கும் மாணவர்கள் கூடைகள், சோப்பு, செருப்புகள் அல்லது முகம் கழுவும் பொருட்களை வைத்து தங்களது வரிசையை அடையாளப்படுத்துவதாக மற்றொரு பயனர் குறிப்பிட்டார்.



