
மீரி, ஜூன் 2 – சரவாக் மீரியில் தன்னை கொள்ளையடித்ததாக பொய்யான புகார் அளித்த 29 வயது பெண் ஒருவர் தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
அந்த பெண், நான்கு பேர் துப்பாக்கி காட்டி தனது தங்க நகைகள் மற்றும் 350 ரிங்கிட் பணத்தை பறித்துச் சென்றதாக போலீசில் புகார் செய்திருந்தார்.
ஆனால் போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில், அவர் கூறிய தகவல்களில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரித்தபோது, கொள்ளை சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பதும், கொள்ளையடிக்கப்பட்டதாக கூறிய நகைகள் மற்றும் பணம் அவரது வசம்தான் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பெண் தனது புகார் பொய்யானது என்பதை ஒப்புக்கொண்டார். தற்போது பொய்யான தகவல் அளித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.



