
லார்கின், மே-25-லார்க்கினில் கடந்த வியாழக்கிழமை கார் கண்ணாடியை பேஸ்பால் மட்டையால் அடித்து நொறுக்கிய நபரை, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை அடுத்து, பாதிக்கப்பட்ட 62 வயதுடைய e-hailing பெண் ஓட்டுநரிடமிருந்து போலீஸாருக்கு புகார் கிடைத்துள்ளதாக, மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
இடதுபுற பாதையில் நுழையும் போது கார் சமிக்ஞை விளக்கை பயன்படுத்தவில்லை எனக் கூறி, கோபமடைந்த சந்தேக நபர் தனது காரை நடுரோட்டில் நிறுத்தி இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
அவரின் இந்த அடாவடி சமூ வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக, குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள், ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



