உலகம்

திடீர் திருப்பம்: வணிகக் கப்பல்களுக்கு Hormuz ‘முழுமையாகத்’ நீரிணைத் திறப்பு: ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான், ஏப்ரல்-18,

மத்தியக் கிழக்கில் திடீர் திருப்பமாக, Hormuz நீரிணை வணிகக் கப்பல்களுக்காக மீண்டும் ‘முழுமையாகத்’ திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

லெபனான்-இஸ்ரேல் இடையில் 10-நாள் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ஸி தனது X தளப் பதிவில் அறிவித்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், தனது Truth Social சமூக ஊடகத்தில் ‘நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.

ஈரானின் இந்த அறிவிப்பை அவர் வரவேற்றாலும், அமைதி ஒப்பந்தம் 100 விழுக்காடு கையெழுத்தாகும் வரை, ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடரும் என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Hormuz திறக்கப்பட்டாலும், காப்புறுதி அபாயங்கள் மற்றும் கண்ணிவெடி அச்சம் காரணமாகக் கப்பல் நிறுவனங்கள் இன்னும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், Hormuz நீரிணைத் திறக்கப்படுவதாக வெளியான அறிவிப்பால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 விழுக்காட்டுக்கும் மேலாகக் சரிந்தது.

இது, உலக நாடுகளை சற்றே நிம்மதியடைச் செய்துள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!