
திரெங்கானு, மே 6 – திரெங்கானு கடற்கரையில் பாறைகளுக்குள் சிக்கியிருந்த ஒரு ஆமையை நல்லுள்ளம் கொண்ட சிலர் காப்பாற்றும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
இரண்டு நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், பாறைகளுக்கு இடையில் சிக்கி அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஆமையை மூவர் இணைந்து தூக்கி வெளியேற்ற முயற்சிப்பது காணப்படுகிறது.
பின்னர், மணற்கரைக்கு கொண்டு வரப்பட்ட ஆமை, கடலுக்கு திரும்பும் வகையில், அதன் அருகே நடந்து கொண்டு ஊக்குவிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி TikTok-ல் பகிரப்பட்ட இந்த வீடியோ, பல வாழ்த்து தெரிவிக்கும் கருத்துகளை பெற்று வருகிறது.
இதனிடையே, இந்த மீட்பு வெற்றிகரமாக அமைந்திருந்தாலும், கடல் ஆமைகளை பாதுகாப்பாக கையாள பயிற்சி பெற்ற அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கடற்கரையில் சிக்கியோ, காயமடைந்தோ இருக்கும் ஆமைகளை கண்டால், பொதுமக்கள் திரையில் காணும் எண்களில் தொடர்புக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
03-8888 5019



