ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-16, மிதக்கும் ஃபெரி பொருட்காட்சி சாலையாக (Muzium Feri Pulau Pinang) மாற்றியமைக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பினாங்கு ஃபெரி, தொடர்ந்து சாய்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான புகைப்படங்களைப் பார்த்தால், கடந்த வாரத்தைக் காட்டிலும் தற்போது அது மேலும் சாய்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
ஃபெரியின் தரைப்பகுதியில் ஓட்டை விழுந்து, கடல் நீர் அதிகளவில் உள்ளே புகுந்திருப்பதே அதற்குக் காரணமென நம்பப்படுகிறது.
ஃபெரியின் நீர்கட்டில் கடல் நீர் புகுந்தாலும் எண்ணெய் கசிவு ஏற்படாது என, பினாங்குத் துறைமுக ஆணையத்தின் (PPC) தலைவர் டத்தோ இயோ சூன் ஹின் (Datuk Yeoh Soon Hin) கடந்த வாரம் உத்தரவாதம் அளித்திருந்தார்.
ஆனால், ஃபெரி தொடர்ந்து சாய்வதால் கடலில் எண்ணெய் கசிவு ஏற்படலாம் என பரலாக அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அந்த மிதவைப் பொருட்காட்சி சாலை இவ்வாண்டு இறுதியில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா காண்பதற்குள், ஃபெரியைக் காப்பாற்றி விட முடியுமா என வலைத்தளவாசிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.