
ஜார்ஜ் டவுன், ஜூலை 8 – நவீனின் கொலை வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் விசாரணை, வருகின்ற நவம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாதங்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் புதிய தேதிகளை நிர்ணயித்துள்ளது.
இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத், விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டின் முடிவிற்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை தொடரவும், வழக்கு மேலாண்மையை செப்டம்பர் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடத்தவும் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கு புக்கிட் குழுகூரில் 18 வயது நவீனை கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான கோபிநாத் 2021 ஆம் ஆண்டு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.