
புத்ராஜெயா, ஆகஸ்ட்-Mykad printing nationwide to face disruptions from today till 31புதியத் தலைமுறை அடையாள அட்டைக்கு மாறும் பணிகள் நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் MyKad அச்சிடும் சேவையில் இன்று, ஆகஸ்ட் 26 முதல் 31-ஆம் தேதி வரை தற்காலிகத் தடை ஏற்படும் என தேசியப் பதிவிலாகாவான JPN அறிவித்துள்ளது.
தற்போதுள்ள MyKad கட்டமைப்பில் இருந்து மேம்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைக்கு மாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதே இந்த சேவைத் தடைக்குக் காரணமாகும்.
எனவே, அவசரத் தேவை இல்லாத பொது மக்கள், இந்த இடைப்பட்ட காலத்தில் அடையாள அட்டை மாற்றம் அல்லது புதுப்பித்தல் விண்ணப்பங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதே சமயம், 12 வயது சிறுவர்களுக்கான முதல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள், புதியத் தலைமுறை MyKad விநியோகம் தொடங்கும் வரை சிறிது காலம் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



