
கோத்தா பாரு, ஜூன்-3-மறைந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் டத்தோ நிக் அப்துல் அசிஸின் பேரன் நிக் அலிஃப் அய்மானை (Nik Alif Aiman Abdul Ariffahmi), பெருவாஸ் அம்னோ தொகுதித் தலைவர் அசார் அஹ்மாட் (Azhar Ahmad) அறைந்ததாகக் கூறப்படும் புகாரைப் பஹாங் போலீஸார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மே 20-ஆம் தேதி, பஹாங், Janda Baik-கில் நடைபெற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கோத்தா பாரு போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டது.
அரசியல் ரீதியான விவாதத்தின்போது அசார் அஹ்மாட் தனது இடது கன்னத்தில் அறைந்ததாக, கிளந்தான் UiTM மாணவர் பிரதிநிதித்துவ மன்றத் தலைவரான நிக் அலிஃப் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இந்தச் குற்றச்சாட்டை அசார் அஹ்மாட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நிக் அலிஃப் தனது நண்பரின் உறவினர் என்பதால், நட்பு ரீதியிலேயே அவரது கன்னத்தைத் தொட்டதாகவும், சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சம்பவம் பஹாங்கில் நடந்ததால், வழக்கின் முழு விசாரணை பஹாங் போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கிளந்தான் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.



