Latestமலேசியா

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டும் தொகுதிப் பங்கீடும் வழிகாட்டுதலும் இன்றி பெரிக்காத்தான் – சஞ்சீவன் சாடல்

கோலாலாம்பூர், ஜூன்-12-நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும், பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி இன்னும் மாநிலத் தலைவரை நியமிக்காமலும், தேர்தல் தயாரிப்புகளைத் தொடங்காமலும் அலட்சியமாக இருப்பதாகப் பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கடுமையாகச் சாடியுள்ளார்.

பெர்சாத்துவுடனான உறவை பாஸ் துண்டித்த பிறகு, கூட்டணியின் எதிர்காலம் குறித்து விளக்கம் அளிக்காமல் தலைமைத்துவம் மௌனம் காப்பது அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

பெரிக்காத்தான் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr அஹ்மாட் சம்சூரி மொக்தார், சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே இத்தகைய அடிப்படை தயாரிப்புகளை முடித்திருக்க வேண்டும் என, இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சஞ்சீவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெற்று அறிக்கைகளைத் தவிர்த்து விட்டு பாஸ் தலைமைத்துவத்தின் ஆற்றலைச் செயலில் காட்ட வேண்டிய தருணமாகும்; இத்தகைய மெத்தனப் போக்கிற்குத் தேர்தல் நாளில் பெரும் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் சஞ்சீவன் எச்சரித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்று, ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!