Latestமலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தல்: BN 25 வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு; ரந்தாவில் Tok Mat, ம.இ.காவுக்கு 2 தொகுதிகள்

சிரம்பான், ஜூலை-16-வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை பாரிசான் நேஷனல் (BN) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஆனால் மொத்தமுள்ள 36 இடங்களில் 25 இடங்களில் மட்டுமே அது போட்டியிடுகிறது.

பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக தங்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க பெரிக்காத்தான் நேஷனலுடன் ஒரு தேர்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்தப்போவதைக் குறிக்கும் தெளிவான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

​சிரம்பான் பரோயில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில், 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை, BN துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் அறிவித்தார்.

அம்னோ நடப்பிலுள்ள தனது 14 தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதுடன், லாபு மற்றும் பிலா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

Tok Mat என அழைக்கப்படும் முஹமட் ஹசான் ரந்தாவ் தொகுதியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடுகிறார்.

மாநில BN தலைவரான டத்தோ ஸ்ரீ Jalaluddin Alias பெர்தாங்கில் களமிறங்குகிறார்.

லிங்கி தொகுதிக்கு மாறியுள்ள பக்காத்தானின் மந்திரி பெசார் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணோக்குக் கடும் போட்டியை வழங்கும் வகையில், Mohd Faizal Ramli-யை பரிசான் களமிறக்கியுள்ளது.

இதற்கிடையில், சென்னா மற்றும் நீலாய் உள்ளிட்ட 7 தொகுதிகளில் ம.சீ.ச போட்டியிடுகிறது.

ம.இ.காவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிரம்பான் ஜெயாவில் தினாளன் T ராஜகோபாலுவும், ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் அச்சுதன் அழகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

​BN தலைமை தனது கூட்டணிக் கட்சியை முறையாக அறிவிக்கவில்லை என்றாலும், தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி மற்றும் Tok Mat ஆகிய இருவரும், தாங்கள் பக்காத்தான் ஹராப்பானுடன் அல்லாமல், “நம்பகமான நண்பர்களுடன்” ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருவதாக சூசகமாகக் கூறியுள்ளனர்.

இதை வைத்துப் பார்க்கும் போது, எஞ்சிய 11 தொகுதிகளில் பாஸ் மற்றும் பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வழி விடவே BN அங்குப் போட்டியிடவில்லை என நம்பப்படுகிறது.

இந்த ‘அதிகாரப்பூர்வமற்ற’ ஒப்பந்தம் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் வெற்றியை உறுதிச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக Tok Mat குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூரில் தனித்தே சாதித்த பாரிசான், நெகிரியில் தனது ‘நம்பகமான’ கூட்டாளியின் உதவியுடன் நெகிரி செம்பிலானைக் கைப்பற்ற பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!