Latestமலேசியா

நெகிரி செம்பிலான் மந்திரிபுசார் அமினுடினை கவிழ்க்க பெரிக்காத்தான் நேசனலுடன் சதியா? – அம்னோ மறுப்பு

சிரம்பான், ஏப் -மந்திரிபெசார் அமினுடின் ஹருனைக் ( Aminuddin Harun )
கவிழ்ப்பதற்காக பெரிகாத்தான் நேஷனலுடன் முன்கூட்டியே உடன்பாடு செய்துகொண்டதாகக் கூறப்படுவதை நெகிரி செம்பிலான் அம்னோ மறுத்துள்ளது.

PKR உதவித் தலைவருமான அமினுடின் மீது நம்பிக்கை இழந்ததாலேயே தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதாக அம்னோ வலியுறுத்தியுள்ளது.

தேசிய முன்னணியின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் அமினுடின் தலைமைத்துவம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அவர்கள் மாநில அரசைக் கைப்பற்றும் நோக்கத்தில் இல்லை என்றும் நெகிரி செம்பிலான் மாநில அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸ் ( Jalaludin Alias ) கூறினார்.

பெரிக்காத்தான் நேசனலின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான நிர்வாகத்தை ஆதரிக்க முடிவு செய்தால், எதிர்க்கட்சியில் சேர தேசிய முன்னணி ஏற்கனவே தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆனால், அரசாங்கத்தை வழிநடத்த அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்க பெரிக்காத்தான் நேசனல் முன்வந்தால் ஒரு வாய்ப்பு வரும்போது, ​​தாம் அதைப் பற்றி விவாதிக்க வேண்யிருப்பதாகவும் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு என்று ஜலாலுடின் வினவினார்.

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், மாநில அரசை அமைப்பதற்கு தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்க பக்காத்தான் ஹரப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

இருப்பினும், தற்போதைய அரசியல் நெருக்கடியை மாநில அரசியலமைப்பு சட்டங்களுக்கு இணங்கத் தீர்ப்பதை, நெகிரி செம்பிலானின் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் முடிவிற்கே அம்னோ விட்டுவிடும் என அவர் கூறினார்.

அதோடு எந்த நேரத்திலும் யாங் டி பெர்துவான் பெசாரை சந்திக்க தாம் தயாராய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!