Latestமலேசியா

நைமா தொடர்பான RM544 மில்லியன் சொத்துகளை முடக்க MACC-க்கு நீதிமன்றம் மறுப்பு

கோலாலம்பூர், மே-22 – முன்னாள் நிதி அமைச்சர் துன் டயிம் சைனுடீனின் (Tun Daim Zainuddin) மனைவி நைமா காலிட் (Naimah Khalid) மற்றும் மேலும் எட்டு பேருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 544 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டு சொத்துகளை முடக்குவதற்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நிபந்தனைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC பூர்த்தி செய்யத் தவறியதால் நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, சிங்கப்பூரில் வைத்திருப்பதாகக் கூறப்படும் சுமார் 121 மில்லியன் ரிங்கிட் மற்றும் சுமார் 423 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதிகளை அணுகுவதையும் நிர்வகிப்பதையும் தடுக்க MACC நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, வருமான வரிச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!