Latestமலேசியா

பணம் எடுக்க முடியாத ஆத்திரத்தில் 5 வங்கி இயந்திரங்களைச் சேதப்படுத்திய ஆடவர்

சரிக்கேய், நவம்பர்-2,சரவாக், சரிக்கேயில், ATM பணப்பட்டுவாடா இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முடியாத ஆத்திரத்தில், ஆடவர் ஒருவர் 5 வங்கி இயந்திரங்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம், சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, ஜாலான் மஸ்ஜிட் லாமா பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் நிகழ்ந்தது.

38 வயது அந்தச் சந்தேக நபர், 2 ATM இயந்திரங்கள், இரண்டு பண வைப்புச் சேவை இயந்திரங்கள் மற்றும் ஒரு காசோலை வைப்புச் சேவை இயந்திரம் ஆகியவற்றை, பாராங் கத்தியைப் பயன்படுத்திச் சேதப்படுத்தியதாகச் சரிக்கேய் மாவட்டப் போலீஸ் தெரிவித்தது.

சந்தேக நபரைத் தடுக்க முயன்ற 21 வயது ஆடவர் ஒருவர், பாராங் கத்தியால் தாக்கப்பட்டதில் இடது கையில் பலத்த காயமடைந்தார்.

இதற்கிடையில், போதையில் இருந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர், Toyota Hilux வாகனத்தில் எதிர்த்திசையில் தப்பிச் சென்றபோது, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார்.

பின்னர், அவர் சரிக்கேய் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக, அவ்வாடவரின் வாகனத்தையும் பாராங்கையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!