
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – போக்குவரத்து அமைச்சராக இருக்கும் அந்தோனி லோக், தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நேற்று வழங்கியுள்ளார்.
தற்போதைக்கு பதவியில் தொடருமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதாக லோக் தெரிவித்தார். இருப்பினும், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும் தனது கட்சியின் முடிவில் மாற்றம் இல்லை என்றும் அவர் கூறினார்.
லோக் கூறுகையில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கும் போது தனது பதவி விலகல் அமலுக்கு வரும். இதற்கான இறுதி தேதியை பிரதமர் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார்.
நஜீப்பின் வீட்டுக் காவல் விவகாரத்தில் DAP-ன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தனது பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டதாக லோக் கூறினார். அவரது பதவிக்கு மாற்றாக யார் நியமிக்கப்படுவார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.



