Latestமலேசியா

பேங்காக்கில் வெள்ளத்தில் ‘ஜெட் ஸ்கி’ ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு – இளைஞர் கைது

பேங்காக், செப்டம்பர் 29 – பேங்காக்கில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் ‘ஜெட் ஸ்கி’ (Jet ski) ஓட்டிய 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜெட் ஸ்கியை வேகமாக ஓட்டி, திடீரெனத் திருப்பியதால் பெரிய அலைகள் ஏற்பட்டன. இந்த அலைகள் அருகில் இருந்த வீடுகள் மற்றும் சாலையோரப் பகுதிகளைத் தாக்கின.

பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை அவரைக் கைது செய்து, ஜெட் ஸ்கியையும் பறிமுதல் செய்தது. அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்விக்கவே அவ்வாறு செய்ததாக காவல்துறையிடம் கூறினார்.

நீதிமன்றம் அவருக்கு முதலில் ஒரு மாத சிறைத்தண்டனையும் 10,000 பாட் அபராதமும் விதித்தது. குற்றத்தை ஒப்புக்கொண்டதால், தண்டனை 15 நாட்கள் சிறை மற்றும் 5,000 பாட் அபராதமாகக் குறைக்கப்பட்டது. மேலும் சிறைத்தண்டனை ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!