பதின்ம வயது மகனிடம் அபத்தமாக தன்னை வெளிப்படுத்திய சிங்கப்பூர் மாது மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர், செப்டம்பர்-26,
தனது 16 வயது மகனிடமே கொஞ்சமும் கூச்சமில்லாமல் அபத்தமாக பாலியல் ரீதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டதாக, 57 வயது சிங்கப்பூர் மாது மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், வீட்டில் இரவு நேரத்தில் பெண்கள் அணியும் அங்கியைத் தூக்கிக் காட்டியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
பின்னர் 2022 ஜனவரி 18ஆம் தேதி காலை 8 மணியளவில், மகனிடம் “நான் மீண்டும் நிர்வாணமாகக் காட்டினேன் என்று போலீசிடம் சொல்கிறாயா? அப்படியானால், நான் காட்டிவிடுவேன்” எனக் கூறி, தனது பாவாடையை கீழிறக்குவதைப்போல் சைகை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்க, அம்மாதுவின் பெயர் வெளியிடப்படவில்லை.
இந்த குற்றச்சாட்டுகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தன என்பதும் வெளிப்படுத்தப்படவில்லை.
இவ்வழக்கு அக்டோபர் 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், பாலியல் வெளிப்பாட்டுக்காக அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
அதே சமயம் பாலியல் தொந்தரவுக் குற்றத்திற்கு 6 மாதங்கள் சிறையும் $5,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்படலாம்.