பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19 – IS தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய பொருட்களை வைத்திருந்ததாக, உணவக பணியாளர் ஒருவருக்கு எதிராக இன்று பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 33 வயது ஜுல் கைரி நாசிர் எனும் அந்த ஆடவனிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி, காலை மணி 9.35 வாக்கில், பட்டர்வொர்த், சுக்கை டூவா எனும் இடத்தில், தனது கைப்பேசியில் அவன் அந்த ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபில்கப்பட்டால், ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்