
சுங்கை பெசார், ஏப்ரல்-10,யக் கழிவறைக் குழிக்குள் வீசியதன் பேரில், 18 வயது பெண் சிலாங்கூர், இன்று சுங்கை பெசார் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
குழந்தைப் பிறப்பை மறைப்பதற்காக அவ்வாறு செய்ததை, உணவுக் கடை பணியாளரான அப்பெண் ஒப்புக் கொண்டார்.
மார்ச் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு கம்போங் சுங்கை ஹஜி டொரானியில் உள்ள எண்ணெய் நிலையத்தின் பெண்கள் கழிவறையில் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் 318-ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.
இரு தரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி, வயது குறைந்த பெண் என்பதோடு, இது முதல் தடவை குற்றமென்பதையும் கருத்தில் கொண்டார்.
இறுதியில், 2,000 ரிங்கிட் அபாரதமும், ஒரு மாத சிறையும் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.