
புத்ராஜெயா, அக்டோபர் 4 — புத்ராஜெயாவில் நடைபெற்ற Citrawarna Speed Festival 2026 கொண்டாட்டத்தில், 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
IOI City Mall புத்ராஜெயாவில் நேற்றிரவு நடைபெற்ற Colours of Parade ஊர்வல நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,500 நடனக் கலைஞர்களும் கலைஞர்களும் பங்கேற்று, மலேசியாவின் பன்முக கலாச்சாரத்தைப் பிரதிபலித்தனர்.
வட, மத்திய, தெற்கு, கிழக்குக் கரை பகுதிகளுடன் சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்த கலைஞர்களும் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களைப் படைத்தனர்.
ஒராங் அஸ்லி பூர்வக்குடியினர், சீன, இந்திய, சீக்கிய மற்றும் சயாமிய சமூகங்களின் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சியில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ Shamsul Azri Abu Bakar, சுற்றுலா, கலை மற்றும் கலாசார துணையமைச்சர் Chiew Choon Man ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tourism Malaysia தலைவர் டத்தோ மனோகரன் பெரியசாமி, IOI Corporation Berhad குழும நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான டத்தோ Lee Yeow Chor ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
‘2026–2027 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ பிரச்சாரத்தை முன்னிட்டு, Tourism Malaysia ஏற்பாடு செய்துள்ள இந்த 12 நாள் விழாவில், பாரம்பரிய கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் மோட்டார் விளையாட்டு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
இவ்விழா இன்று நிறைவடைகிறது.



