தம்பி சுத்தியலால் தாக்கியதாக சந்தேகம்; மாராங்கில் 43 வயது அண்ணன் உயிரிழப்பு

மாராங், அக்டோபர்-3 – திரங்கானு, மாராங் கம்போங் தாசேக்கில், தம்பி சுத்தியலால் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 43 வயது ஆடவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், 9 உடன்பிறப்புகளில் மூத்தவரான Mohd Nasir Ismail என அடையாளம் காணப்பட்டார்.
சம்பவத்தின் போது வீட்டின் வரவேற்பறையில் இருந்த அவரது 63 வயது தாயார் Hasnah Sulong, வீட்டின் மற்றொரு பகுதியில் இருந்து அலறல் மற்றும் சண்டை சத்தம் கேட்டதாகக் கூறினார்.
இதையடுத்து அவர் வெளியே இருந்த தனது 80 வயது கணவரை அழைத்துள்ளார்.
வீட்டுக்குள் சென்றபோது, Nasir தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவரது தந்தை கண்டுள்ளார்.
மனநலப் பிரச்சனைக் கொண்ட 42 வயது தம்பி இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.
சண்டையைத் தடுக்க முயன்ற 36 வயது சகோதரியும் சுத்தியலால் தாக்கப்பட்டு முதுகுப் பகுதியில் காயமடைந்தார்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே சந்தேக நபர் தனது தந்தையையும் கத்தியால் குத்தியதாக தாயார் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை மாராங் மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.



