
டெல் அவிஃவ், அக்டோபர் 4 — flydubai விமானத்தில் பெரும் அசம்பாவிதத்தைத் தடுக்க துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் Smit Machchhar-ரை, “உலகின் நாயகன்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு பாராட்டியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் Machchhar-ருடன் தொலைப்பேசியில் பேசிய நெத்தன்யாஹு, இஸ்ரேலின் அடுத்த சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், சுதந்திர தின நிகழ்ச்சியில் தீபம் ஏற்றும் கௌரவத்தை Machchhar-க்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வழங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 30-ஆம் தேதி, துபாயிலிருந்து டெல் அவிஃவ் நோக்கிச் சென்ற flydubai FZ1073 விமானத்தில், துணை விமானி Machchhar-ரைத் தாக்கி விமானத்தை வீழ்த்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த நிலையிலும் cockpit கதவைத் திறக்க Machchhar போராடியதைத் தொடர்ந்து, பயணிகளும் விமானப் பணியாளர்களும் உள்ளே நுழைந்து துணை விமானியை கட்டுப்படுத்தினர்.
பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் Tabuk நகரில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
Machchhar-ரின் துணிச்சலான நடவடிக்கை பல உயிர்களைக் காப்பாற்றியதாக நெத்தன்யாஹு பாராட்டினார்.



