Latestமலேசியா

படிப்பில் கெட்டிக்கார மாணவிக்கு நேர்ந்த சோகம்; யொங் பெங் பள்ளியில் 16 வயது மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு

பத்து பஹாட், அக்டோபர்-4 – ஜோகூர், யொங் பெங்கில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில், 16 வயது மாணவி ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நான்காம் படிவ மாணவியான அவர், நேற்று மாலை 5.30 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பதற்றத்தில் பள்ளிக்கு விரைந்த பாட்டி, தனது பேத்தி பள்ளி வளாகத்தில் பலவீனமான நிலையில் கீழே கிடப்பதைக் கண்டுள்ளார்.

அப்போது மாணவி சுயநினைவுடன் இருந்ததாகவும், அவரது உடலில் உலர்ந்த இரத்தக் கறைகள் மற்றும் தாக்கப்பட்டதைப் போன்ற காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் மாணவி சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

தாயை இழந்தப் பிறகு அந்த மாணவி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்; தந்தையோ கோலாலம்பூரில் வேலை செய்கிறார்.

இந்நிலையில், மாணவி கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்றக் கோணத்தில் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், யூகங்களைப் பரப்பாமல் விசாரணைக்கு உரிய இடமளிக்குமாறு ஜோகூர் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!