Latestமலேசியா

அவசரகால எச்சரிக்கைகளைப் பெற கைப்பேசிகளைப் புதுப்பிக்குமாறு MCMC அறிவுறுத்தல்

சைபர்ஜெயா, நவம்பர் 19 – நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அவசரகால எச்சரிக்கை முறைமையான EWS அறிவிப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக, பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளின் இயங்குதளத்தைப் புதுப்பிக்குமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) அறிவுறுத்தியுள்ளது.

Cell Broadcast System (CBS) தொழில்நுட்பத்தின் மூலம், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கைப்பேசிகளுக்கு ஒரே நேரத்தில் எச்சரிக்கைகள் அனுப்பப்படும். இதற்காகத் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யவோ, பதிவு செய்யவோ தேவையில்லை.

ஆரம்பகட்ட வழிகாட்டுதலின்படி, ஐபோன் 11 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களுக்கு iOS 27.2, ஆண்ட்ராய்டு கைப்பேசிகளுக்கு Android 12, ஹுவாவே கைப்பேசிகளுக்கு EMUI 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவைப்படுகின்றன. மென்பொருளைப் புதுப்பித்த பின்னர் கைப்பேசியை மறுதொடக்கம் செய்து, அவசரகால எச்சரிக்கை அமைப்பு செயல்பாட்டில் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கிடையே, EWS முறைமையை அறிமுகப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை விளக்கவும் ஊடக நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களுடன் MCMC சிறப்புக் கலந்துரையாடல் நடத்தியது. நவம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட தொழில்நுட்பச் சோதனை, முறைமையை விரிவான அளவில் செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகும்.

இந்தத் திட்டம் MCMC, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான NADMA மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. அவசரகால அறிவிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!