
பெட்டாலிங் ஜெயா, மே-6-பெட்டாலிங் ஜெயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஜாலான் 17/21 பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்தது.
70 வயதுடைய ஒருவர் ஓட்டிய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் புகுந்து மோட்டார் சைக்கிளில் மோதியதாக போலீஸ் கூறியது.
20 வயது மதிக்கத்தக்க இளைஞரான அந்த மோட்டார் சைக்கிளோட்டி, கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரோட்டுநருக்குக் காயமேதும் இல்லை.
அவர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தொடக்கக் கட்ட விசாரணைத் தெரிவிக்கிறது.
இந்த விபத்து தொடர்பில் கூடுதல் தகவல்கள் இருந்தால், சாட்சிகள் முன்வருமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.



