Latestமலேசியா

பேராக்கில் கால்வாயில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்; விபத்தில் பழங்குடியின ஆடவர் பலி; பெண் காயம்

பேராக், ஜூலை 23 – பேராக் மாநிலத்தின் லங்காப், கம்போங் சுய் சாக் (Kampung Chui Chak, Langkap) பகுதியில் நேற்று இரவு, மோட்டார் சைக்கிள் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில், 31 வயதான பழங்குடியின ஆண் ஒருவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்ததாக நம்பப்படும் 25 வயது பெண் இரு கைகளிலும் மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தெலுக் இந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில், ஆண் கால்வாயில் முகம் குப்புற கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மீட்ட பிறகு, சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.

காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி வழங்கப்பட்டு, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிரிழந்தவரின் உடல் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!