
லாருட், ஆகஸ்ட்-4-பேராக், லாருட் அருகே போலீஸாரை பாராங் கத்தியால் தாக்க முயன்ற 39 வயது ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி கம்போங் சுங்கை ஜெர்னியில் இரண்டு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளைக் காயப்படுத்திவிட்டுத் தப்பியோடிய அந்த நபர், தோட்டக் குடிசை ஒன்றில் ஒளிந்திருப்பதாகக் கிடைத்தத் தகவலின் பேரில் போலீஸார் நேற்று முன்தினம் அங்குச் சென்றனர்.
கைதுச் செய்ய முயன்றபோது, அவர் போலீஸாரை பாராங் கத்தியால் தாக்க முயன்றதாக, பேராக் போலீஸ் தலைவர் Alwi Zainal Abidin தெரிவித்தார்.
தற்காப்புக்காக அதிகாரிகள் அவரது காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஏற்பட்ட போராட்டத்திற்குப் பின் அவ்வாடவர் கைதுச் செய்யப்பட்டார்.
மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதித்தபோது அவர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.
சுட்டுக் கொல்லபட்ட ஆடவருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 10 குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.



