Latestமலேசியா

30 வயதுக்கு மேற்பட்ட ஆண் இராணுவ வீரர்களுக்கு கட்டாய ஹார்மோன் பரிசோதனை: பென்டகன் அதிரடி உத்தரவு

வாஷிங்டன், செப்டம்பர்-19-அமெரிக்காவின் தற்காப்புத் தலைமையகமான பென்டகன், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண் இராணுவ வீரர்களுக்கு testosterone ஹார்மோன் குறைபாட்டைக் கண்டறியும் கட்டாயப் பரிசோதனையை மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.

​புதிய மருத்துவ வழிகாட்டுதலின்படி, வருடாந்திர உடற்பரிசோதனை மற்றும் வழக்கமான சுகாதார மதிப்பீடுகளின் போது இந்தச் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் ​30 வயதுக்குட்பட்ட வீரர்கள் கோரிக்கை விடுத்தாலோ அல்லது மருத்துவர்கள் பரிந்துரைத்தாலோ மட்டுமே அவர்களுக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இ​ராணுவத்தின் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.

​இருப்பினும், இத்தகைய கட்டாயப் பரிசோதனைகள் தேவையற்றவை என்றும் சில உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், இராணுவ வீராங்கனைகளுக்கான தனி வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனப் பென்டகன் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!