Latestமலேசியா

Festival Mega iLINDUNGu விழாவைத் தொடக்கி வைத்தார் ரமணன்; 2,000 வேலை வாய்ப்புகள், 500 கிக் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு!

2,000 வேலை வாய்ப்புகள்; 500 கிக் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு – Festival Mega iLINDUNGu விழாவைத் தொடக்கி வைத்தார் ரமணன்!

கோத்தா டாமன்சாரா, செப்டம்பர் 19 –
வேலை தேடுவோருக்கு 2,000 வேலை வாய்ப்புகள், கிக் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் Festival Mega iLINDUNGu 2026 விழா கோத்தா டாமன்சாரா, Strand Mall-இல் களைகட்டியுள்ளது.

மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், MYFutureJobs வேலை வாய்ப்புக் கண்காட்சியில் 25 நிறுவனங்கள் பங்கேற்று, RM2,000 முதல் RM12,000 வரையிலான சம்பளத்துடன் சுமார் 2,000 வேலை வாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்தார்.

அதோடு, Foodpanda, Grab மற்றும் Halo நிறுவனங்களின் பங்களிப்புடன் திரட்டப்பட்ட RM1.5 மில்லியனுக்கும் அதிகமான நிதி, 500 கிக் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 400 இல்லத்தரசிகளுக்கு LINDUNG Kasih Suri Rumah திட்டத்தின் கீழ் RM48,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், வேலை வாய்ப்புக் கண்காட்சி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச சுகாதாரப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!