Latestமலேசியா

மூன்று மாதங்களில் RM193,675 வருமானம் ஈட்டிய இணையவழி சூதாட்டக் கும்பல் முறியடிப்பு – மூவர் கைது

அலோர் ஸ்டார், நவம்பர் 4 – கெடா (Kedah), சுங்கைப்பட்டாணியில் (Sungai Petani) இணையவழி சூதாட்ட மையம் நடத்தி, மூன்று மாதங்களில் 193,675 ரிங்கிட் வருமானம் ஈட்டியதாக நம்பப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று ஆண்களைப் போலீசார் கைது செய்தனர்.

21 முதல் 23 வயதுக்குட்பட்ட அந்த மூவரும், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12.25 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூன்றாவது மாடியிலுள்ள ஓர் அறையைத் தலைமையகமாகப் பயன்படுத்தி, கணினிகள் மற்றும் கைப்பேசிகள் மூலம் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நேப்பாளச் சந்தையைக் குறிவைத்து இந்தச் சூதாட்ட நடவடிக்கைகளை மூன்று மாதங்களாக நடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மூவருக்கும் மாதம் 3,600 ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அவர்களது கடப்பிதழ்கள் காலாவதியாகியிருந்ததாகவும் கெடா மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா (Adzli Abu Shah) தெரிவித்தார்.

மேலும், அந்த வளாகத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சூதாட்டம், குடிநுழைவு, குற்றவியல் மற்றும் மின்சாரச் சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியக் குற்றவாளிகள் மற்றும் கும்பலின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!