Latestமலேசியா

பேராக் தைப்பிங் மாவட்டப் புதிய போலீஸ் தலைவராக சூப்ரிடெண்டன்ட் சரவணன் சண்முகம் நியமனம்

தைப்பிங், ஆகஸ்ட்-1-பேராக், தைப்பிங் மாவட்டப் புதியப் போலீஸ் தலைவராக சூப்ரிடெண்டன்ட் சரவணன் சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச மலேசியப் போலீஸ் படையான PDRM மேற்கொண்டுள்ள 26 மூத்த அதிகாரிகளுக்கான பதவி மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

​இதன் மூலம், ACP என்ற தற்காலிகப் பதவி உயர்வை ஏற்று, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சரவணன் சண்முகம் இப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்பார்.

​இதுவரை தைப்பிங் மாவட்டப் போலீஸ் தலைவராகப் பணியாற்றி வந்த ACP
Mohamad Nasir Ismail,  புக்கிட் அமானுக்குப் பதவி உயர்வுப் பெற்று செல்வதைத் தொடர்ந்து, சரவணன் சண்முகம் இப் புதிய பொறுப்பை வகிக்கவுள்ளார்.

பொதுச் சேவை மற்றும் சட்டம் ஒழுங்குத் துறையில் மலேசிய இந்தியர்களின் பங்களிப்பிற்குச் சான்றாக அமைந்துள்ள இந்நியமனம் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!