
மலாக்கா, ஆகஸ்ட்-10 – மலாக்காவில் 12 வயது மாணவனுக்குப் பள்ளிக் கழிவறையிலும் அலுவலகத்திலும் உடல் ரீதியாக பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கைதான ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாணவனின் தாயார் புகார் செய்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை அந்நபர் கைதானார்.
விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்; இந்நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் மேற்கொண்டு விசாரிக்கப்படுவதாக மலாக்கா போலீஸ் தலைவர் Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.
தலைமையாசிரியர் பல தடவை உடல் ரீதியாக தம்மிடம் தகாத வகையில் நடந்துகொண்டதாக, அந்த ஆறாமாண்டு மாணவன் தனது தாயிடம் புகார் கூறியுள்ளான்.
ஆகக் கடைசியாக ஜூலை 29-ஆம் தேதி பள்ளிக் கழிவறையில் அச்சம்பவம் நடந்துள்ளது.
மாணவனைப் பின்னாலிருந்து கட்டியணைத்து “I Love You” எனக் கூறியதோடு, அவனையும் அவ்வாறு சொல்ல அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு முன் ஜுன் மாத வாக்கில் தலைமையாசிரியர் அறையில் தனது நண்பனுடன் ஏதோ வேலையில் ஈடிபட்டிருந்த போது, நண்பனின் கண்ணெதிரிலேயே அம்மாணவனை சந்தேக நபர் தடவியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.