Latestமலேசியா

மலாக்கா மாநிலத் தேர்தல்: அக்டோபர் 18ஆம் தேதி PH வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா, அக்டோபர் 13 – மலாக்கா மாநிலத் தேர்தலில் (PRN), பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan – PH) போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி அறிவிக்கப்படுமென பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் (Azman Abidin) தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலைப் பிரதமரும் PH தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியத் தேர்தல் ஆணையத்தின்படி, வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10ஆம் தேதியும், பொதுவாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதியும் நடைபெறும்.

மேலும், பிகேஆர் (PKR) கட்சி இத்தேர்தலில் ஏழு முதல் எட்டு தொகுதிகளில் போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் மச்சாப் ஜெயா (Machap Jaya) மற்றும் ரெம்பியா (Rembia) தொகுதிகளும் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!