
கோலாலம்பூர், ஜூலை 29 – மலேசிய குடிநுழைவுத் துறையின் MyIMMs கணினி அமைப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி, தற்காலிக வேலை வருகை அனுமதிச் சீட்டுகளை (PLKS) முறைகேடாக அங்கீகரித்ததாக சந்தேகிக்கப்படும் 12 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஆறு குடிநுழைவுத் துறை அதிகாரிகள், ஒரு போலீஸ் அதிகாரி, இரண்டு நிறுவன இயக்குநர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் அடங்குவர்.
2011-ஆம் ஆண்டுக்கான PLKS ஒதுக்கீட்டை வரி (Levi) செலுத்தாமல் பயன்படுத்தி, 1,306 போலி PLKS அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டதால் அரசுக்கு சுமார் 2.4 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் Ops Crack நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த வழக்கு, SPRM சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



