Latestமலேசியா

மலேசிய குடும்பங்கள் ஆண்டுக்கு 97 கிலோ வரை உணவை வீணாக்குகின்றன – DOSM அதிர்ச்சி தகவல்

புத்ராஜெயா, ஜூலை-3-மலேசியாவில் ஒரு குடும்பம் ஆண்டுதோறும் சராசரியாக 31.9 கிலோ கிராம் முதல் 97.3 கிலோ கிராம் வரை உணவை வீணாக்குவதாக, மலேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

​தேசிய குடும்பக் குறியீட்டு கணக்கெடுப்பின்படி, சமைக்காத கச்சா (raw) உணவுகளை விட சமைக்கப்பட்ட உணவுகளே அதிகம் வீணடிக்கப்படுவதாக தலைமை புள்ளியியலாளர் டத்தோ ஸ்ரீ Dr Mohd Uzir Mahidin தெரிவித்தார்.

சமைத்த உணவுகளில் 16.7 விழுக்காட்டுடன் ‘சோறு’ முதலிடத்திலும், சமைக்காத உணவுகளில் 29.1 விழுக்காட்டுடன் ‘காய்கறிகள்’ முதலிடத்திலும் உள்ளன.

​மேலும், சுமார் 80 விழுக்காட்டு குடும்பங்கள் உணவுச் கழிவுகளைத் தனியாகப் பிரிக்காமல், மற்ற குப்பைகளுடன் சேர்த்தே கொட்டுவது தெரியவந்துள்ளது.

காலாவதி தேதிகள், குளிர்சாதன பெட்டியில் நீண்ட நாட்கள் உணவை வைப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக வாங்குவது போன்றவையே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!