Latestமலேசியா

மாணவருடன் ஹோட்டலில் தங்கிய பெண் ஆசிரியை; தகாத உறவு குறித்து விசாரணை!

செர்டாங், செப்டம்பர்-24,சிலாங்கூர், செர்டாங்கில் ஆசிரியை ஒருவருக்கும் ஆண் மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகாத உறவு வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் வெளியில் சென்று சாப்பிடுவதாகக் கூறி அழைத்துச் சென்று, பின்னர் ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஹோட்டலுக்கு அந்த ஆசிரியை தன்னை அழைத்துச் சென்றதாக 17 வயது மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​அங்கு அந்த ஆசிரியை பாலியல் உறவில் ஈடுபட்டதோடு, அதனைத் தனது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவுச் செய்துள்ளார்.

​அந்த வீடியோ ஆதாரங்கள் சிக்கிய பிறகே, அவர்கள் பலமுறை ஹோட்டலில் தங்கிய இந்தத் தகாத உறவு குடும்பத்தினருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியவந்துள்ளது.

​அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இணையடுத்து திங்கட்கிழமை இரவு பண்டார் கின்றாரா வட்டாரத்தில் அவ்வாசிரியை கைதானார்.

வயதுக் குறைந்த மாணவரின் நலன் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்ட விதிகளின் கீழ், பள்ளி நிர்வாகமும் போலீஸும் இது குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!