
கோலாலம்பூர், ஜூன்-27 – இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் 2025 டையலிசிஸ் மானிய உதவிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மையங்களில் டையலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் இந்தியர்கள் இதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் அவ்வாறு செய்ய, நேற்று தொடங்கி ஜூலை 30 வரை 35 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விண்ணப்பத்தாரரின் தகுதி – விதிமுறைகள் குறித்த தகவல்களுக்கு திரையில் காணும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
இவ்வேளையில், தனியார் தமிழ் பாலர் பள்ளிகளுக்கான மித்ராவின் மானியத்திற்கான விண்ணப்பங்களும் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, தகுதிப் பெற்ற தமிழ் பாலர் பள்ளி நடத்துநர்கள் அனைவரும் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 30-ஆம் தேதியாகும்.
திரையில் காணும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து google form படிவத்தைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.
மலேசிய இந்தியக் குழந்தைகளுக்கு தரமான, முழுமையான பாலர் கல்வி வழங்கப்படுவதை உறுதிச் செய்வதற்காக ‘Anak Pintar Negara Gemilang’ திட்டத்தின் கீழ் இந்த மானியத்தை மித்ரா வழங்குகிறது.