![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/MixCollage-10-Sep-2024-05-06-PM-1732.jpg)
பகாங், செப்டம்பர் 10 – முகநூலில் இரண்டு முறை இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் சிக்கிய 28 வயது ஆசிரியர் 131,247 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
கடந்த ஜூலை 26ஆம் திகதி பாதிக்கப்பட்டவர் முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட இணைய கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தில், ‘rednotes’ எனும் இணைப்பின் வாயிலாக இணைந்துள்ளதை பகாங் காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஓத்மான் (Datuk Seri Yahaya Othman) உறுதிப்படுத்தினர்.
முகநூலில் பார்த்த முதலீட்டுத் திட்டத்தை நம்பி முதலில் 500 ரிங்கிட் முதலீடு செய்தவருக்கு 400 ரிங்கிட் லாபம் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, 22 பரிவர்த்தனைகள் வழி 109,817 ரிங்கிட்டை 11 வங்கிகளுக்கு அவர் செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர், இரண்டு மாதங்களில் மற்றொரு இல்லாத கடன் தந்திரத்தில் சிக்குவதற்காக, அந்த ஆசிரியர் தான் முதலீட்டு செய்த திட்டத்தில் 20,000 ரிங்கிட் கடன் வாங்க முயன்ற போதுதான் தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்துள்ளார்.
தனது சேமிப்பு மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் உட்பட நண்பர்களிடமும் கடன் வாங்கி இவர் முதலீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தியிருக்கிறார்.