ரமணன்: தீபாவளி – மடானி அரசாங்கத்தின் கீழ் வலிமை மற்றும் முன்னேற்றத்தின் அடையாளம்
கோலாலாம்பூர், அக்டோபர்-18,
இவ்வாண்டு தீபாவளி மடானி அரசாங்கத்தின் கீழ் மலேசிய இந்தியச் சமூகத்தின் ஒற்றுமை, வலிமை மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாகும்.
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில், தீபாவளியின் “இருள் மீதான ஒளியின் வெற்றி” என்ற உணர்வை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஒற்றுமை, பொருளாதார வலிமை மற்றும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.
அதே சமயம், அரசாங்கம் இதுவரை RM 500 மில்லியனும் மேலான நிதியை SPUMI, PENN, BRIEF-i, Vanigham மற்றும் Soorian போன்ற திட்டங்கள் மூலம் இந்தியத் தொழில் முனைவோருக்காக ஒதுக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
இத்திட்டங்கள் யாவும் மக்களுக்கு சமமான பொருளாதார வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிச் செய்யும் மடானி அரசின் கடப்பாட்டை பறைசாற்றுகின்றன.
“தீபாவளியின் ஒளி என்பது ஒரு ‘புதிய நம்பிக்கை” ; அது நம் சமூகத்தை தொடர்ந்து வெற்றியை நோக்கி வழி நடத்தும் என ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.