Latestமலேசியா

லாஹாட் டத்துவில் உடற்கூறு நிபுணர் மரணம்; விசாரிக்க சுயேட்சை பணிக்குழுவை அமைத்த சுகதார அமைச்சு

புத்ராஜெயா, அக்டோபர்-3, சபா, லாஹாட் டத்துவில் வேலையிட பகடிவதைக்கு ஆளாகி இராசயண உடற்கூறு நிபுணர் இறந்துபோனதாகக் கூறப்படும் சம்பவத்தை விசாரிக்க, ஒரு சுயேட்சை சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுச்சேவைத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ போர்ஹான் டோலா (Tan Sri Borhan Dollah) அதற்குத் தலைமையேற்பார்.

அக்டோபர் 10 தொடங்கி பணிக்குழு விசாரணையை மேற்கொள்ளும் என, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் (Datuk Seri Dr Dzulkefly Ahmad) தெரிவித்தார்.

மருத்துவம், உளவியல், உடற்கூறு, மனநலம், பகடிவதை, தற்கொலைத் தடுப்பு உள்ளிட்ட துறை சார் நிபுணர்கள் ஐவர், அப்பணிக்குழுவில் சுயேட்சை உறுப்பினர்களாக இடம் பெறுவர்.

அந்த உடற்கூறு நிபுணரின் மரணத்திற்கான காரணத்தைத் கண்டறிவதோடு, லாஹாட் டத்து மருத்துவமனையின் வேலைக் கலாச்சாரம் குறித்தும் ஆய்வு செய்வர்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட பெண், பகடிவதைக்கு ஆளானாரா என்பதும் ஆழமாக விசாரிக்கப்படும்.

விசாரணை அறிக்கையுடன், சுகாதார மையங்களில் பகடிவதையைத் தடுப்பதற்கான பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க பணிக்குழுவுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Dr Tay Tien Yaa எனப்படும் அப் பெண், இராசயண உடற்கூறு துறைத் தலைவரின் பகடிவதை தாங்காது, ஆகஸ்ட் 29-ஆம் தேதி லாஹாட் டத்துவில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக முன்னதாகக் கூறப்பட்டது.

மேலிடம் மோசமாக நடத்தியதாலும், அளவுக்கு மீறிய வேலைப் பளுவாலும் அவர் மனச்சோர்வில் இருந்ததாக, அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர் முகநூலில் அம்பலப்படுத்தியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!