Latestஅமெரிக்காஉலகம்

லிவர்பூல் கால்பந்து அணியின் பங்குகளை வாங்க அமேசான் ஜெஃப் பெசோஸ் தீவிரம்

வாஷிங்டன், ஆகஸ்ட்-11-இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான லிவர்பூல் எஃப்.சி-யின் முக்கிய பங்குகளைக் கைப்பற்ற உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் அடங்கிய குழு ஒன்று தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய கோடீஸ்வரர் Lakshmi Mittal-லின் மருமகனும் தொழிலதிபருமான அமித் பாட்டியா (Amit Bhatia) தலைமையிலான இந்த முதலீட்டாளர் குழுவில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) மற்றும் ஃபேஸ்புக் இணை நிறுவனர் எடுவார்டோ சாவெரின் (Eduardo Saverin) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

​லிவர்பூல் அணியின் 30 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்குகளை வாங்க இந்த குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதன் மூலம் லிவர்பூல் அணியின் மதிப்பு சுமார் 4.4 பில்லியன் பவுண்டுகளாக, அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு சுமார் 24 பில்லியனாக உயர்ந்துள்ளது.

​தற்போதைய உரிமையாளர்களான Fenway Sports Group (FSG) பெரும்பான்மை பங்குகளைத் தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளபோதிலும், இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரமாண்ட ஒப்பந்தம் மட்டும் நிறைவடைந்தால், அனைத்துலக விளையாட்டு உலகின் மிக முக்கிய வணிக முதலீடுகளில் ஒன்றாக இது அமையும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!