Latestமலேசியா

வங்கிக் கணக்குகள் முடக்கம்: RM50 மில்லியன் அபராதத்தை செலுத்த முடியாத நிலையில் நஜீப்

கோலாலம்பூர், செப்டம்பர் 25 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், SRC International வழக்கில் நிபந்தனை மன்னிப்பின் கீழ் விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை தற்போது செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹமட் ஷாஃபி அப்துல்லா (Tan Sri Muhammad Shafee Abdullah) தெரிவித்துள்ளார்.

நஜீப்பின் சில வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், அவரிடம் அந்தத் தொகையைச் செலுத்துவதற்கான நிதி இல்லை என்றும், முன்னாள் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சம்பளம் பெற பயன்படுத்தியதாகக் கூறப்படும் Affin வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக ஷாஃபி தெரிவித்தார்.

50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த பொதுமக்களிடம் நஜீ lப் ஒருபோதும் நன்கொடை கோரவில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், 1MDB வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஒத்திவைக்கக் கோரும் மனு அக்டோபர் 14ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!