
புத்ராஜெயா, மே-25 – புத்ராஜெயா வாழ் இந்திய அரசு ஊழியர்கள் சங்கமான ‘IMAIYAM, நேற்று சனிக்கிழமை ‘IMAIYAM Mesra Walk 2025’ என்ற பெயரில் நடைப்பயணத்தை நடத்தியது.
பிரிசிண்ட் 7, Cyberjaya Lakeside Promenad ஏரியில் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை பல்வேறு அங்கங்களுடன் அந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரத்த அழுத்தம், இனிப்பு நீர் போன்றவற்றைக் கண்டறியும் அடிப்படை மருத்துவ பரிசோதனைகளும் அவற்றிலடங்கும்.
நடைப்பயணத்தோடு, பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்த உடற்பயிற்சியும், சிறு சிறு விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றன.
குலுக்குச் சீட்டும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு பிரமுகராக உள்ளூர் திரைப்பட கலைஞர் ‘பேபி கோபா’ எனப்படும் குபேன் மகாதேவன் கலந்துகொண்டார்.
புத்ராஜெயா, சைபர்ஜெயா பகுதிகளில் பணிபுரியும் இந்திய அரசு ஊழியர்கள், MMU, UPM, UNITEN போன்ற அருகாமையிலுள்ள பல்கலைக்கழக இந்திய மாணவர்களள் என சுமார் 60 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
வாரக் கடைசியை பயனுள்ள வழியில் கழிக்க முடிந்ததோடு, ஒருவருக்கொருவர் பழகி நட்பு பாராட்டவும் இந்நிகழ்வு வழிகோலியதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்