
கோலாலம்பூர், ஜுன் 22- சீனாவில் சுற்றுலா மேற்கொண்ட மலேசிய
சுற்றுப்பயணிகள் குழு ஒன்று அந்நாட்டு மக்களை கேலி செய்த சம்பவம் குறித்த காணொளி வைரலானதை தொடர்ந்து மலேசிய பெண் ஒருவர் ஒருவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.
இச்சம்பவத்திற்காக தனது தவறை அறிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அந்த பெண் தனது டிக் டோக்கில் பதிவிட்டார்.
ஜுன் 15 ஆம் தேதியன்று நிகழ்ந்த இந்த சம்பவத்திற்காக உண்மையாகவும்
மனப்பூர்வமாகவும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
தனது செயல் நடவடிக்கையை புரிந்து கொண்டதோடு அது சில தரப்பினருக்கு காயத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் உணர்வுகள், குறைகூறல்கள் மற்றும் கருத்துக்களை தாம் மதிப்பதாகவும், எவரையும் காயப்படுத்தும் , தர்மசங்கடம் மற்றும் எந்தவொரு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது என்று நுர் அஷிகின் ( Nur Asyiqin) என்ற அந்த பெண் தனது டிக்டோக்கில் பதிவிட்டுள்ளார்.



