Latestமலேசியா

கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி: ஜோகூரில் ‘Pocket Talk’ நடமாடும் பிரச்சாரத்தைத் தொடங்கியது HRD Corp

ஜோகூர் பாரு, ஜூன் -22 – மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, மனிதவள அமைச்சு KESUMA-வின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் Pocket Talk எனும் புதிய நடமாடும் பிரச்சாரத் திட்டத்தை ஜோகூர், கெம்பாஸில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இத்திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

அரசாங்கத்தின் மனித மூலதன மேம்பாட்டுத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் குறித்த விவரங்கள் அடிமட்ட மக்கள் வரை எளிதில் சென்றடைவதை உறுதிச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஜோகூர் மாநிலத்தின் வலுவான பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு, இந்த விழிப்புணர்வுப் பயணத்தின் முதல் மாநிலமாக ஜோகூர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வேளையில், கடந்தாண்டில் ‘Skills4Johor’ திட்டத்தின் கீழ் 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் ஜோகூர் மாநிலத்தில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக HRD Corp தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷாமிர் அசிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் மலேசியாவின் மற்ற மாநிலங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!