Latestமலேசியா

விமானம் தரையிறங்குவதை கைப்பேசியில் பதிவு செய்த பயணி; கேலி செய்த நபருக்கு இணையத்தில் கண்டனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 -விமானம் தரையிறங்கும் காட்சியை கைப்பேசியில் பதிவு செய்த பயணியை கேலி செய்த X சமூக வலைத்தள பயனருக்கு, இணையத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

“ஏன் குறைந்த வருமானம் கொண்டவர்கள் விமானம் தரையிறங்குவதை எப்போதும் வீடியோ எடுக்கிறார்கள்?” என்று அவர் பதிவிட்டதுடன், ஜன்னல் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் படம் பிடிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்த இணையப் பயனர்கள், அந்த நபரும் பொருளாதார (Economy) வகுப்பிலேயே பயணம் செய்ததை சுட்டிக்காட்டி, பிறரின் வருமானத்தை ஊகித்து கேலி செய்வது தவறு என்று விமர்சித்தனர்.

விமானப் பயணம் பலருக்கு இன்னும் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருப்பதால், தரையிறங்கும் காட்சியை பதிவு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்றும், பிறரின் மகிழ்ச்சியை மதிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!